நெப்போலியன் மகன் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!.. காவல் நிலையத்தில் மருத்துவர் புகார்!…

Photo of author

By அசோக்

நெப்போலியன் மகன் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!.. காவல் நிலையத்தில் மருத்துவர் புகார்!…

அசோக்

napoleon

புதுநெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நெப்போலியான். அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ஹீரோ, வில்லன் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். வில்லன், ஹீரோ எப்படி நடித்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி படம் சூப்பர் ஹிட் அடித்தது.

எஜமான் உள்ளிட்ட பல படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், கமலின் தசாவதாரம், விருமாண்டி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குணால், தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷுக்கு 4 வயதாகும் போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டது.

அதன்பின் பல மருத்துவர்களிடம் சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை. மகனுக்கு தொடர்ந்து அமெரிக்கவில் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு நிலங்களை வாங்கி விவசாயமும் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தனுஷுக்கு திருமணமும் நடந்தது. இதை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுத்துவிட்டார் என்றெல்லாம் பேசினார்கள். இது எங்கள் குடும்ப விவகாரம். இதில் மற்றவர்கள் பேச வேண்டாம் என நெப்போலியன் கோரிக்கை வைத்தார். ஆனால், யாரும் கேட்கவில்லை.

இந்நிலையில், தனது மகன் தனுஷுன் உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. என் மகனும், மருமகளும் மகிழ்ச்சியாக வாழும் நிலையில் அவர்கள் சொந்த வாழ்க்கை பற்றி அவதுறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.