மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், காமெடி ட்ரெண்டிங் வீடியோ போடக்கூடியவர்களுக்கும் முன்னுதாரணமாகவும் பல கண்டனன்ட் கிரியேட்டர்களுக்கு தன்னுடைய காமெடியால் உதவி வருபவர் நடிகர் வடிவேலு. சினிமாவில் இருந்து சிறிது காலம் வெளியே அவர் மீண்டும் மாமன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
சமீப காலமாக இவர் சுந்தர்சியுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய நிலையில் காங்கிரஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக பட குழு பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுவும் பல சேனல்களுக்கு தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்து விவரித்து வருகிறார்.
அந்த வகையில் விஜயகாந்த் குறித்து நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது :-
நடிகர் வடிவேலு தமிழ் சினிமா துறையில் நுழைவதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன கவுண்டர் திரைப்பட வாய்ப்பானது உதயகுமார் என்பவரால் நடிகர் வடிவேலுக்கு கிடைத்த நிலையில் அவருக்கு உடை கூட இல்லாமல் இருந்த நிலையில் பேட்டி சட்டை அவருக்கு விஜயகாந்த் வாங்கி கொடுத்தார் என பலரும் சொல்லி வந்த நிலையில் நடிகர் வடிவேலு அதனை மறைமுகமாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தனக்கு வாங்கி கொடுத்ததாகவும் கேப்டன் தனக்காக எதையும் இதுவரை செய்ததில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சின்ன கவுண்டர் திரைப்படத்தை தொடர்ந்து 10 மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுக்கு படத்தின் கதாநாயகனுடன் இணைந்து வேலை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் உண்மையை ஒப்புக்கொள்ள வடிவேலும் மறுக்கிறார். இவரிடம் திறமை இருந்தாலும் திறமைக்கு அதிகமாக திமிர் இருக்கிறது என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.