நமக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடலாம். ஆனால் இந்த கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தான் இன்று பலரும் திணறுகிறார்கள். கடன் பிரச்சனைகள் நமக்கு உருவாக வேண்டும் என, நமக்கு கொடுத்தவர் நவகிரகங்களில் உள்ள கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு மீள முடியும் என்பது குறித்து தற்போது காண்போம்.
கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இனிமேல் கடனே வாங்க கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் கடனை வாங்க வைப்பதில் இவர் வல்லவர். இவரை சரி கட்டி விட்டால் விரைவில் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.
எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் அதனை ஒரு எளிய பரிகாரத்தின் மூலம் மிக விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும்.
அதுதான் உப்பு பரிகாரம். இந்த பரிகாரத்தை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் செய்து வந்தோம் என்றால், நிச்சயம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியை வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை நாளில் அந்த ஜாடியில் கல் உப்பை நிரப்பி கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து மகாலட்சுமி தாயாரையும், உங்களது குல தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு கல் உப்பில் அந்த நாணயத்தை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதே போன்ற தொடர்ந்து 27 வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில், ஐந்து ரூபாய் நாணயங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக 27 ஐந்து ரூபாய் நாணயங்கள் சேர்ந்த பின்னர், அதனை ஒரு மஞ்சள் நிற துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த நாணயங்களை காணிக்கையாக கோவிலில் போட்டு விட வேண்டும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வரும் பொழுது, கண்டிப்பாக உங்களது கடன் பிரச்சனை தீரும்.
குலதெய்வ கோவிலில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கிய பின்னர், அந்த நாணயங்களை காணிக்கையாக கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். இதனால் உங்களுடைய தோஷங்கள் நீங்கி, உங்கள் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். எனவே உங்களது கடன் விரைவில் அடைவதற்கான வழியை கடவுள் உங்களுக்கு காட்டுவார்.