மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய தக்லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், அசோக் செல்வன், சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்வுகள் வேகம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் உடைய முதல் சிங்களான ஜிங்குச்சா வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சிம்புவிடன் அவருடைய திருமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நடிகர் சிம்பு அவர்களின் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் தன்னுடைய கனவுகள் என்ன என்பது குறித்தும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சிம்பு தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்திருப்பதாவது :-
தனக்கு திருமணத்தில் பிரச்சனை இல்லை என்றும் இங்க இருக்கக்கூடிய மக்களிடத்தில் தான் பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்த சிம்பு, இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கக்கூடிய மனப்பான்மை இல்லாமல் போய்விட்டது எனவும் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் இல்லை என்றால் அதற்கு பதில் மற்றொருவர் என மாற்றிக் கொள்ளக்கூடிய மனப்பான்மை தவறானது என்றும் பொதுவாகவே வாழ்க்கையை பலர் வந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் அதற்காக வந்தவர்களை வேண்டாம் என நினைப்பது தவறான காரியம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, நமக்குன்னு ஒருத்தர் வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே நல்ல படியாக மாறும் என்றும் அந்த உறுத்தல் காச நான் கடைசி வரை வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்யவே நான் சொல்ல வருவது எனக்கு மறந்து விடும் என கூறி சென்று அவர்கள் தன்னுடைய உரையை முடித்தார்.