மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய திரைப்படம் தான் தாக் லைஃப். இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் சிலம்பரசன் மற்றும் திரிஷா உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வரக்கூடிய நிலைகள் ப்ரோமோஷன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா அவர்களிடம் நடிகர் கமலஹாசன் அவர்கள் வாழைப்பழத்தை வைத்து இரட்டை அர்த்த காமெடி செய்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய கமலஹாசன் அவர்கள் இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டு இருப்பது அருவருக்கத்தக்க ஒன்றாக உள்ளது என்றும் இதனை அவர் விளையாட்டாக கூறியிருந்தாலும் அவர் சொல்லியிருப்பது தவறு என்றும் பல தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா அவர்கள் வாழைப்பழத்தை எண்ணெயில் பொரித்து உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அதனுடைய பெயர் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அருகில் இருந்த அசோக் செல்வன் அவர்கள் பழம்பொரி என பதிலளிக்க கமலஹாசனும், பெயர் தெரியாது ஆனால் வாயில் மட்டும் நுழைத்துக் கொள்வார்கள் என தெரிவித்தது அங்கிருந்த ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.