விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியங்கா அவருடைய முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மாகாபா உடன் விஜய் டிவி சீரியல் நடிகை தொகுப்பாளனியாக இடம் பெற்றிருப்பது மேலும் சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது.
சென்ற வாரத்தில் பிரியங்கா வசி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய நிலையில் பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றபின் தற்பொழுது வசின்ற வரை காதலித்த திருமணம் செய்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் எதிர்ப்புகளும் மறுபுறம் ஆதரவுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. சூழல் ஒருபுறம் இப்படி இருக்க பிரியங்கா முழுவதுமாக விஜய் டிவியை விட்டு வெளியேறப் போகிறார் என மறுபுறம் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மாகாபாவுடன் பெண் தொகுப்பாளனியாக மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை லட்சுமி பிரியா களம் இறங்கி இருக்கிறார். இவர் வந்ததும் அதிர்ந்த மாகாபா என்ன நீ வந்திருக்க என்பது போல கேட்க, அதற்கு லட்சுமி பிரியா அவர்கள் PK அனுப்பிய VK நான் என்பது போல கிண்டலாக பதில் கொடுத்திருந்தார். ஒருபுறம் பிரியங்கா திருமணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தாலும் மறுபுறம் இவர் சேனலை விட்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் தான் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன.அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுபாலனியாக பிரியங்கா மீண்டும் களம் இறங்கினால் இவற்றை காண முடிவு ஏற்படும்.