தமிழ் திரையுலகில் 90களில் நிறைய சாதிய படங்கள் வெளிவந்தது. குறிப்பாக கவுண்டர் மற்றும் தேவர் சமூகத்தின் பெருமைகளை பேசும் நிறைய படங்கள் அப்போது உருவானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்கள் கவுண்டர் சாதி பெருமைகளை பேசியது. அதேபோல், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கினார்கள். கமல் கூட தேவர் மகன் எடுத்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் சாதியை வைத்து படமெடுப்பது என்பது கிரின்ச்சாக மாறிவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்களில் பலரும் சாதி பற்றி பேசுகிறார்கள். அதை விட முக்கிய காரணம், ஒரு சாதியை மட்டம் தட்டி இப்போது படமெடுத்தால் படம் வெளியே வராது என்கிற நிலைதான் சமூகத்தில் நிலவுகிறது. ஏனெனில், சென்சார் போர்ட் விட்டாலும் சாதிய அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதனாலேயே ‘தேவையில்லாத பிரச்சனை எதற்கு?’ என இயக்குனர்கள் யோசிக்கிறார்கள். அதேநேரம், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மேல் சதி மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை தங்களின் படங்களில் தொடர்ந்து காட்டி வருகிறார்கள். அதேபோல். பா.ரஞ்சித்தும் தனது படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலை பேசி வருகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை போன்ற படங்களில் சாதிய பிரச்சனைகளை மாரி செல்வராஜ் அழுத்தமாக பேசியிருந்தார். எனவே, ரஞ்சித் மாரி, செல்வராஜ் ஆகியோர் சாதியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என சிலர் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு.
இந்நிலையில், திமிறு, காளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தருண் கோபி ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் ‘பா.ரஞ்சித், மாரி, வெற்றி மாறன் நீங்களாம் சாதிய பத்தி படம் எடுங்க.. ஆனால், அதுக்காக மத்த சாதியை ஏன் மோசமா காட்டுறீங்க.. இருங்கடா நானும் சாதிய படம் எடுக்க வரேன். என் சாதி வாழ்வியலை நான் காட்டுறேன்’ என கோபமாக பேசியிருக்கிறார்.