நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும்.
சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும்.
காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால் ஆய்லி ஸ்கின் என்று அர்த்தம்.அதுவே உங்கள் முகம் வறண்டு காணப்பட்டால் உங்களுக்கு ட்ரை என்று அர்த்தம்.
அதுவே எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை என்றால் உங்களளுக்கு நார்மல் ஸ்கின் என்று அர்த்தம்.எண்ணெய் சருமமாக இருந்தால் ஜெல் டைப் அழகு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால் எண்ணெய் பசை கட்டுப்படும்.அதேபோல் வறண்ட ஸ்கின் பிரச்சனை இருப்பவர்கள் க்ரீம் டைப் பொருட்களை பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை கட்டுப்படுத்த வழிகள்:
முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய் பசை கட்டுப்படும்.கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்தால் எண்ணெய் பிசுபிசுப்பு குறையும்.அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கடலை மாவு,பச்சை பயறு மாவு ஆகியவற்றை பேஸ்டாக மாற்றி சருமத்தில் அப்ளை செய்து குளித்தால் எண்ணெய் பிசுபிசுப்பு கட்டுப்படும்.
வறண்ட சருமத்தை கட்டுப்படுத்த வழிகள்:
தேங்காய் எண்ணையை முகத்தில் அப்ளை செய்தால் வறட்சி குறையும்.இயற்கை க்ரீம்களை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
பால் ஆடைகளை சருமத்தில் அப்ளை செய்தால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.வைட்டமின் ஈ மாத்திரையை சருமத்தில் அப்ளை செய்தால் தோல் மிருதுவாக இருக்கும்.