திரையுலகில் சர்ச்சைகளின் மன்னனாக சமீப காலத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் ஆக இருந்து வந்த இவர் தேவையற்ற அரசியலால் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். அதன் பின் மாமனார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் சமீப காலமாக விஜயகாந்த் குறித்த பல விமர்சனங்களை பேசிய வண்ணம் உள்ளார். இவை ஒருபுறம் இருக்க நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு ஏன் தான் செல்லவில்லை என்பது குறித்தும் விலக்கியுள்ளார்.
நடிகர் விவேக் அவர்கள் வடிவேலுவிற்கு நண்பராக இருந்த நிலையில் அவரின் மறைவிற்கு நேரில் சென்று வடிவேலு அவர்கள் துக்கம் விசாரிக்கவில்லை என பலரும் தங்களுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக இது குறித்து எந்த வித பதிலையும் தெரிவிக்காமல் வடிவேலு அவர்கள் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் தற்பொழுது விவேக் அவர்களின் மறைவுக்கு தான் ஏன் செல்லவில்லை என்பது குறித்து கண்ணீர் சிந்திய வீடியோ ஒன்றினை வடிவேலு அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் வடிவேலு பேசியிருப்பதாவது :-
விவேக்கின் உடைய இறப்பு தாங்க முடியாத வழியாக இருந்ததாகவும் பலர் விவேக் அவர்களின் உடைய இறப்பிற்கு நான் செல்லவில்லை என கூறி வருவதாகவும் ஆனால் உண்மை என்னவென்றால் அவருடைய வீட்டிற்கு சென்ற விவேக்கின் மனைவி குழந்தைகள் அனைவரையும் சந்தித்து விவேக்கின் மரணம் குறித்த துக்கம் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விவேக் திடீரென இறந்து போவார் என நான் சற்றும் நினைக்கவில்லை என்றும் அவர் இறந்த காலகட்டத்தில் தன்னுடைய வாழ்வில் மிகவும் மோசமானதான விஷயங்களை சந்தித்ததாகவும் வடிவேலு அவர்களின் வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து கொண்டு இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் விவேக் அவர்களின் இறப்பிற்கு நேரில் செல்ல முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.