சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டிருந்தார். இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டாவது மகள் முக்காடு அணியாத நிலையில் முதல் மகள் கதீஜா மட்டும் முக்காடு அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் இரட்டை வேடம் போடுவதாக பல கருத்துக்களை வெளியிட்டனர். இதுகுறித்து பல வருடங்கள் கழித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார்.
இந்த சர்ச்சைகளுக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த முற்றுப்புள்ளி பின்வருமாறு :-
பொது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு விருப்பம் மட்டுமே என்றும் பணக்காரன் முதல் கடவுள் வரை அனைவரும் விமர்சிக்கப்பட்ட தான் வருகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒற்றுமையாகவும் ஆணவம் இல்லாமலும் பிறரை புண்படுத்தாமலும் இருந்தாலே அந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமையும் என்றும் யார் ரகுமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
என் மகளுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் அவளுடன் சண்டையிடுவதற்கு கூட எனக்கு தகுதி இல்லை என்றும் யா ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார் அதிலும் குறிப்பாக அவள் பொதுவாகவே இரண்டு பக்கம் மின்னஞ்சல்களை மிகவும் அருமையாக எழுதக்கூடியவள் என்றும் அதை நான் எப்பொழுதுமே வியந்து பார்ப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார் கூடிய விரைவில் அப்பாவுக்கு என் கடிதங்கள் என ஒரு புத்தகம் வர வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். இதற்கு ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகள் கதீஜா கூட முக்காடு அணிவது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிவு என்றும் என் அப்பா எதற்காகவும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.