சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.
எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்துகொண்டது. இதில் அஜித்தின் டீம் 3ம் பரிசை பெற்றது.
இப்போது ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ஒரு போட்டியில் 2வது பரிசையும் அவரின் டீம் வென்றது. வருகிற அக்டோபர் மாதம் வரை அஜித்தின் டீம் கார் ரேஸ்களில் விளையாடவுள்ளது. ஒருபக்கம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் சென்னை வந்து குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.
நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண அஜித் தனது குடும்பத்துடன் வந்தார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் டீம் மோதியது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவியுடன் மேட்ச் பார்க்க வந்தார். எனவே, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து மேட்ச் பார்த்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.