உங்கள் உதட்டு கருமை நீங்கி சிவப்பழகு பெற இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.உதடுகள் அழகு பெற இதை தினமும் முயற்சி செய்யலாம்.
தீர்வு 01:
புதினா இலை
இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து உதட்டின் மேல் பூசி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து வந்தால் உதடு கருமை நீங்கும்.
தீர்வு 02:
கொத்தமல்லி தழை
முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை உதட்டின் மீது தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு கருமை நீங்கும்.
தீர்வு 03:
கற்றாழை ஜெல்
முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கிண்ணத்தில் இந்த கற்றாழை ஜெல் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இதை போட்டு அரைக்க வேண்டும்.இந்த பேஸ்டை உதடுகள் மீது தடவி ஸ்க்ரப் செய்தால் கருமை உதடு சிவப்பாக மாறும்.
தீர்வு 04:
பீட்ரூட்
தேங்காய் எண்ணெய்
ஒரு முழு பீட்ரூட்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மிக்சர் ஜாரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் வாணலி வைத்து பீட்ரூட் பேஸ்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பீட்ரூட் கலவையை ஆறவைத்து டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை உதடுகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் உதடுகள் மீதான கருமை நீங்கிவிடும்.