நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் சொந்தங்களுக்கு இடையில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.அதிலும் மூத்த மகள் மற்றும் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வழக்கம் உறவு முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அன்னிய உறவில் இருந்து திருமண செய்வதாக இருந்தால் இது பொருந்தாது.குடும்ப உறவு,நெருங்கிய பந்தத்தில் இருக்கும் தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பயனுக்கு திருமணம் செய்யக் கூடாது.
தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையனுக்கு திருமணம் நடந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு,ஊனம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் நடந்தால் அவர்கள் இருவரும் இரு குடும்பத்தின் பொறுப்பை சசுமக்க நேரிடும்.
அதேபோல் ஆணி மாதத்தில் பிறந்த தலைச்சம் பயனுக்கும் அதே மாதத்தில் பிறந்த தலைச்சம் பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது.ஆனால் இளைய மகன் மற்றும் இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.ஜோதிடப்படி அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
ஆனால் இந்த காலத்தில் சட்டப்படி தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையன் திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையன் திருமணம் செய்தாலும் காதல் இருந்தால் மற்றவை தடையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.