வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

Photo of author

By Divya

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

Divya

தற்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.அனைத்து விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.இந்த சமுதாயத்தில் பணம்தான் நமக்கு மதிப்பு மரியாதையை கொடுக்கிறது.

நாம் பணம் சம்பாதிப்பதைவிட அதை சரியான முறையில் சேமிக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் ஆன்மீக ரீதியாக நாம் சில தவறுகளை செய்தால் எப்பொழுதும் பணக் கஷ்டத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

செல்வ செழிப்புடன் வாழ நாம் பணத்தை மதிக்க வேண்டும்.அதேபோல் வீட்டில் பணம் குவிய லட்சுமி தாயாரின் பார்வை நம் இல்லத்தின் மீது விழ வேண்டும்.ஆனால் நாம் செய்யும் சிறு தவறுகள்கூட பணம் சேராமல் போக காரணமாகிவிடும்.

பணக் கஷ்டம் வர காரணங்கள்:

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் லட்சுமி தேவி குடி இருக்க மாட்டார்.இதனால் பணக் கஷ்டம்,பண விரையம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் ஒட்டடை,பாசி,அழுக்கு படிந்திருந்தால் பணம் தங்காது.

உடைந்த கண்ணாடி பொருட்கள்,நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

மாலை நேரத்தில் அதாவது சூரியன் மறைந்த பின்னர் வீட்டை துடைப்பது,பெருக்குவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் வீட்டில் தலைவிரி கோலத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பூஜை அறையில் தலைவிரி கோலத்தில் இருக்கக் கூடாது.

வாரம் ஒருமுறை குறிப்பாக வெள்ளிக்கிழமை நாளில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கடவுள் படத்தை அலங்கரித்து மனதார வழிபட வேண்டும்.

சாப்பிட்ட பிறகு தட்டை சுத்தம் செய்யாமல் வைத்தல்,வீட்டில் குப்பை தேங்கி இருத்தல் போன்ற செயல்களை செய்தால் வீட்டில் பணம் சேராது.