தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Divya

நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது.

மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது.

புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு அவ்வப்போது மஞ்சள் பூசி அதை பழுதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல சுப முகூர்த்த தின நாளில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது நல்லது.தாலி கயிறை அம்மா மற்றும் கணவரை தவிர பிறர் முன் மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பிறரிடம் தாலி கயிற்றை மாற்றிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பம் தரித்த பெண்கள் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம்.தாலிக்கயிற்றில் சேப்டி பின் போன்றவற்றை மாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் தாலிக்கயிறு மாற்றுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை நாளில் தாலி கயிற்றுக்கு மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.இந்த வெள்ளிக்கிழமை நாளில் தலைக்கு குங்குமம் வைப்பதை பழக்கமாக்கி கொள்ளவும்.அதேபோல் அஷ்டமி,பிரதமை போன்ற திதிகளில் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

நைலான் தாலி கயிறு அணிவதை தவிர்த்துவிட்டு நூல் தாலி கயிறு அணிய வேண்டும்.அடிக்கடி தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.