தமிழக அரசுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்வாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதன்படி Occupational Therapist,Social Worker ஆகிய பணிக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
இடம்: விருதுநகர்
பணி:
Occupational Therapist
Social Worker
காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் மொத்தமாக 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 09-05-2025
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- முதல் ரூ.23,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க B.Sc,B.Ed,M.Ed,M.Sc,MSW உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காலிப்பணியிடம்:
Occupational Therapist பணிக்கென்று ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் Special Educator பணிக்கென்று ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் Social Worker பணிக்கென்று ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
நேர்காணல் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.
விண்ணப்பக் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Executive Secretary/District Health Officer,District Health Society,District Health Office,Collectorate Campus,Virudhunagar-626001.