Pahalgam Attack: ஜம்முவில் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு செல்லும் தண்ணீரை தடுப்பது உள்ளிட்டவைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏவுகணை ஆனது 120 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.
எந்த நேரத்திலும் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுக்கலாம் என்ற காரணத்தினால் வரும் ஏழாம் தேதி நாடு தழுவிய ஒத்திகை அறிவுரையை வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது எதிரி நாட்டினர் நம் மீது போர் தொடுக்கும்போது பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிப்பதற்கு தான் இந்த நாடு தழுவிய ஒத்திகை எனக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து அறிவுறுத்தப்படும். இந்த வகையில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டால் ராணுவ படை முன்கூட்டியே இது குறித்து சமிங்கை கொடுத்து விட வேண்டும். அதேபோல மக்களும் போர் சமயத்தில் பத்திரமாக மாற்று இடத்திற்கு செல்ல வைப்பது உள்ளிட்டவர்கள் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய தொழிற்சாலைகள் அவர்கள் தாக்காத வண்ணம் பாதுகாப்பு சூழல் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது ரீதியாக ஏழாம் தேதிக்கு பிறகு மக்களுக்கு சில அறிவுரைகளை அந்தந்த மாநில அரசு கொடுக்கும்.