Kalaignar Magalir Urimaithogai: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் மகளிருக்கு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதேபோல இரண்டரை ஆண்டுகள் கழித்து இதற்குரிய பணியை ஆரம்பித்தது. முதலில் இந்த திட்டத்திற்கென்று சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அரசு பணியில் இருக்கும் ஓய்வூதியதாரர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என யாருக்கும் இந்த திட்டம் செல்லுபடி ஆகாது என கூறியிருந்தனர்.
அதே போல பலர் தகுதி வாய்ந்தும் இத்திட்டம் மூலம் பணம் பெற முடியவில்லை. இதனால் பெண்கள் திமுக மீது அதிருப்தியில் இருந்தனர். இதனை அறிந்த ஆளும் கட்சி கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது. அதாவது மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்கள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் என அனைவருக்கும் திட்டம் மூலம் உரிமை தொகை கிடைக்கும் எனக் கூறினர். அதேபோல இத்திட்டம் மூலம் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மொத்தமாக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதில் பயனடைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் புதிய அறிவிப்பை சட்டப்பேரவையில் ஆளும் கட்சி வெளியிட்டது. இனி வரும் அனைத்து ஆண்டிலும் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்கள் என அனைவரும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. தேர்தல் முடியும் சமயத்தில் இதில் மீண்டும் மாற்றம் வரலாம் என கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆட்சி மாறும் நேரத்தில் இந்த திட்டம் இல்லாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளதாம். இந்த திட்டத்திற்கான கால வரையறை 10 மாதம் வரை தான் என தகவல்கள் பரவி வருகிறது.