பிடி ஆருக்கு எதிராக செருப்பை சுழட்டியடித்த பாஜக சரண்யா!! துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்!!

Photo of author

By Rupa

பிடி ஆருக்கு எதிராக செருப்பை சுழட்டியடித்த பாஜக சரண்யா!! துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்!!

Rupa

BJP's Saranya has thrown his sandal against PDR!! Marama gang who killed by beating

BJP DMK: பட்டுக்கோட்டையில் நேற்று இரவு பாஜக பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்டது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இவர் மதுரையின் மத்திய தொகுதியுடைய பொறுப்பாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு கடைக்கு சென்று திரும்பும் போது மர்ம கும்ப இவரை துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையானது முன்விரோத காரணமாக நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர். ஆனால் இவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பை கழட்டி வீசியுள்ளார். 2022 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பணியில் இருந்த போது எதிர் தாக்குதலால் உயிரிழந்தார். இவரது உடல் மதுரைக்கு வந்த போது அஞ்சலி செலுத்துவதற்காக பி.டி.ஆர் வருகை புரிந்திருந்தார். அச்சமயத்தில் பலர் பி டி ஆர் காரை வழி மறித்ததோடு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்ட கலவரத்தில் குறிப்பிட்ட சில பெண்கள் தங்கள் காலணிகளை எடுத்து காருக்கு எதிராக வீசினர்.

அதில் ஒரு செருப்பு காருக்குள் விழுந்ததை அடுத்து, இந்த செருப்புக்கு சொந்தக்காரியான சிண்ட்ரெல்லா எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்திற்கு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று நக்கலான பதிவையும் பி.டி.ஆர் ட்விட்டரில் போட்டிருந்தார். பின்பு அதை வைத்தே அந்த செருப்பு யாருடையது, மேற்கொண்டு அவரது காரில் இந்தியாவின் கொடி இருந்ததால் அதன் மீது தாக்கியுள்ளனர் எனக் கூறி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி, ஒரு அமைச்சர் காரில் செல்லும் பொழுது அருவருக்கத்தக்க வகையில் பேசக்கூடாது.

மேற்கொண்டு காரில் கொடி இருக்கும் பட்சத்தில் செருப்பு கொண்டு வீசுவது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் எனக் கூறி இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இருக்கையில் தற்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.