நம் வீட்டை எப்படி வாஸ்து பார்த்து காட்டுகின்றோம் அதேபோல் தான் வீட்டில் இருக்கின்ற பொருட்களும் உரிய திசை பார்த்தவாறு அமைந்திருக்க வேண்டும்.குறிப்பாக பணம் வைக்கும் பொருட்களை எப்பொழுதும் உரிய திசை பார்த்தவாறு மட்டுமே வைத்து புழங்க வேண்டும்.
வாஸ்து குறை உள்ள வீட்டில் பொருட்கள் வைத்தால் பணக் கஷ்டங்கள் அதிகமாக வரும்.எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.அதேபோல் வீட்டில் பணம் வைக்கும் பீரோ எந்த திசை பார்த்தவாறு இருக்க வேண்டும் எந்த திசை பார்த்தவாறு இருக்க கூடாது என்பதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
நம் வீட்டில் வடக்கு திசை பார்த்தவாறு பீரோ,பணப் பெட்டி,நகைப்பெட்டி போன்றவை இருந்தால் செல்வ செழிப்புடன் வாழலாம்.வடக்கு திசை குபேரருக்கு உகந்த திசையாகும்.இந்த திசை பார்த்தவாறு பீரோ வைத்தால் பணக் கஷ்டம் வராமல் இருக்கும்.
வீண் விரையம் ஆகாமல் இருக்க வடக்கு திசை நோக்கியவாறு பீரோவை வைக்கலாம்.வடக்கு திசையில் பீரோவை வைக்க முடியாதவர்கள் இதற்கு அடுத்து கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கியவாறு பீரோ வைக்கலாம்.இந்த திசைகளில் பீரோ வைத்தால் பணக் கஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.
ஆனால் தப்பி தவறியும் தெற்கு திசை பார்த்தவாறு மட்டும் பீரோவை வைத்துவிடாதீர்கள்.தெற்கு திசை நோக்கி பணம் வைக்கும் பெட்டி,பீரோ போன்றவற்றை வைத்தால் பணக் கஷ்டம் ஏற்படும்.தெற்கு திசை நோக்கியவாறு செல்வங்களை வைத்தால் அவை வீண் விரையமாகிவிடும்.எனவே தெற்கு திசை நோக்கியவாறு பீரோ,பணப்பெட்டி போன்றவற்றை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.