PMK: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்குரிய அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு முன்பு மாநாட்டில் நடந்த அசம்பாவிதத்தை வைத்து தவிர்த்து வந்தது. ஆனால் இந்த வருடம் 42 கோட்பாடுகளின் கீழ் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் முழு நிலவு மாநாடு நடத்தும் பஞ்சாயத்தான வட நெமிலி மக்களுக்கு பாதிப்பு உண்டாகக்கூடும் எனவே இந்த மாநாட்டை ரத்து செய்யும் படி நீதிமன்றத்தின் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவானது சிறப்பு நீதிபதி முன்னிலையில் அமர்வுக்கு வந்தது, மேற்கொண்டு இந்த வழக்கையொட்டி தமிழக அரசு சார்பாக பேசிய வழக்கறிஞர், கிட்டத்தட்ட பாமக நடத்த போகும் மாநாட்டிற்கு 42 நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. அதன் கீழ் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு இருக்கையில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி அனுமதி வழங்கிய பிறகு அதனை ரத்து செய்ய முடியாது எனக் கூறி உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் சாதியல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு பட்டியலின மக்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறையும் இதே போல் ஏதேனும் களேபரம் உண்டாகும் என வடநெமிலி பஞ்சாயத்து ரீதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மனு கொடுத்தது தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.