இந்த உலகில் கெட்ட சக்திகள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.பொறாமை குணம்,கோபம்,வெறுப்பு,தொழில் போட்டி போன்ற காரணங்களால் செய்வினை,கண்திருஷ்டி,பில்லி சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.உங்களுக்கு செய்வினை இருந்தால் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம்.
குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுதல்,அடிக்கடி கால் விரலில் அடிபடுதல் போன்றவை நிகழ்ந்தால் வீட்டில் செய்வினை
வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
வீட்டில் வெளவால் நடமாட்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.வீட்டில் துன்பம் தரும் விஷயங்கள் அதிகமாக நடைபெறுதல்,சுப நிகழ்வுகளில் தடங்கல் ஏற்படுதல் போன்றவை வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதை உணர்த்துகிறது.
உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டிருப்பதை கண்டறிய எளிய வழி ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதை கண்டறிய கல் உப்பு மட்டும் போதும்.இது லட்சுமி கடாச்சம் நிறைந்த ஒரு பொருளாகும்.இந்த கல் உப்பு வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை கட்டுப்படுத்தி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு மட்டும் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொருட்களை வைத்து செய்வினை இருப்பதை கண்டுபிடித்துவிடலாம்.ஒரு கண்ணாடி கிளாஸில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு யார் காலும் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.அதேபோல் யார் கண்ணும் படாத இடத்தில் இந்த கிளாஸ் இருக்க வேண்டும்.இரண்டு நாட்களுக்கு இந்த கிளாஸை பார்க்கக் கூடாது.
இரண்டு நாட்கள் கழித்து தலைக்கு தண்ணீர் ஊற்றிய பிறகு கிளாஸை பார்க்க வேண்டும்.கிளாஸ் நீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் அதாவது தெளிவு இல்லாமல் இருந்தால் அது செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் நல்ல மாந்திரீகரை வைத்து செய்வினையை நீக்கலாம்.