உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

Divya

நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வநேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும்.

ஆனால் உங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் உடைந்த பொருட்களை பயன்படுத்தி வருவீர்கள்.இது உங்களுக்கு அதிக அபசகுனத்தை ஏற்படுத்தும்.இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அந்தவகையில் வீட்டில் இருந்து தூக்கி ஏறிய வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

**ஓடாத தையல் மெஷின்
**உடைந்த விளக்கு
**உடைந்த பூட்டு
**பயன்படுத்தாத அதாவது ஓடாத கடிகாரம்
**பயன்படுத்தாத சைக்கிள்
**கிழிந்த செருப்பு
**சேதமான கலசம்
**சேதமான துடைப்பம்
**உடைந்த கண்ணாடி பொருட்கள்
**உடைந்த கடவுள் சிலை
**சேதமான கடவுள் படம்

இங்கு சொல்லப்பட்டுள்ள பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும்.இந்த பொருட்கள் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.பணப் பிரச்சனை,வீண் விரையம் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும்.வீட்டில் உடைந்த பொருட்கள் இருப்பது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க பூஜை அறையில் குலதெய்வ படத்தை வைத்து வணங்க வேண்டும்.அதேபோல் வீட்டிற்கு வெளியில் கண்திருஷ்டி கணபதி படத்தை வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடும்.

வீட்டில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ராமர் பட்டாபிஷேகத்தை வீட்டின் முன் மாட்டி வைக்க வேண்டும்.இந்த ராமர் பட்டாபிஷேகத்தை வீட்டில் வைத்தால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களை நெருங்காது.கண் திருஷ்டி,செய்வினை போன்றவை நெருங்காமல் இருக்க வீட்டில் ராமர் பட்டாபிஷேகத்தை வைத்து பூஜை செய்து மனதார வழிபடுங்கள்.