நாளுக்கு நாள் கோடை வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.எங்கும் வெப்பமயமாக இருப்பதால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெயில் காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பலரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
அதிகளவு வெப்பத்தால் குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பெரியவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அனைவருக்கும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைதான் உள்ளது.
வெளியில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டில் அதைவிட அதிகமான சூட்டை அனுபவிக்க நேரிடுகிறது.ஃபேன்,ஏசி இல்லாமல் வீட்டில் இருப்பது என்பது தற்சமயம் முடியாத காரியமாக இருக்கிறது.மாடி வீடு முதல் ஓட்டு வீடு வரை எல்லா வீடுகளிலும் வெப்பம் அதிகமாக உள்ளது.குறிப்பாக சிமெண்ட் அட்டை வீடுகளில் வெயில் எப்படி இருக்கும் என்று வசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
நண்பகல் நேரத்தில் சிமெண்ட் அட்டை வீடுகளில் இருப்பது சவாலான விஷயமாக உள்ளது.சிமெண்ட் அட்டை வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது.இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் வெப்பமான சூழலே நிலவும்.
மற்ற வீடுகளைவிட சிமெண்ட் அட்டை வீட்டிற்கு ஃபேன்,ஏசி,ஏர்கூலர் போன்றவற்றின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த மின்சாதனங்களை பயன்படுத்தும் பொழுது கரண்ட் பில் சற்று அதிகமாகிறது.ஆகவே சிமெண்ட் அட்டை அமைந்த வீட்டில் வசிப்பவர்கள் வீட்டை குளிர்விக்க அதிக செலவு இல்லாத சில ட்ரிக்ஸை பின்பற்றலாம்.
சிமெண்ட் அட்டை மீது கூலிங் பெயிண்ட் அடித்தால் வீட்டிற்குள் வெப்பம் ஊடுருவகாமல் இருக்கும்.கூலிங் பெயிண்ட் வெள்ளை நிறத்தில் இருக்கும்.இந்த கூலிங் பெயிண்ட் விலை குறைவாகதான் இருக்கிறது.இதை வீட்டு சிமெண்ட் அட்டை மீது பூசினால் நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.கூலிங் பெயிண்ட் அடித்த பிறகு தென்னை ஓலையை பரப்பி வைத்தால் வீட்டிற்குள் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.