இந்த வருடம் கோடை வெயில் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருக்கின்றதை பார்க்க முடிகிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயில் வாதி வதக்கி வருவதால் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
வீட்டில் ஃபேன்,ஏசி,ஏர் கூலர் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கழிக்க முடியாத நிலையில் அனைவரும் இருக்கின்றோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதன பொருளாக இவை மாறிவிட்டது.பணம் இருப்பவர்களால் ஏசி,ஏர்கூலர் வாங்கி அனுபவிக்க முடியும்.பணம் இல்லாதவர்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இப்பொழுது சொல்லப்பட இருக்கின்ற டிப்ஸை பின்பற்றலாம்.
1)வீட்டு ஜன்னல்பகுதியில் ஒரு கனமான பெட்சிட்டை நினைத்து கட்டிவிடலாம்.இதனால் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழைவது கண்ட்ரோல் ஆகும்.
2)வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்தால் வீட்டிற்குள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.அதேபோல் ஒயிட் வாஷ் செய்தால் வீட்டிற்குள் வெப்பம் ஊடுருவது கட்டுப்படும்.
3)வீடு முழுவதும் குளிர்ச்சியாக இருக்க வண்ணமான LED பல்புகளை பயன்படுத்தலாம்.
4)வீட்டை சுற்றி மரக் கன்றுகள்,செடிகளை வைத்து பராமரித்தால் வீட்டிற்குள் குளிர்ச்சியாக இருக்கும்.
5)அடிக்கடி மின்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மின்சாதனங்கள் பயன்படுத்திய பிறகு அதை அன்பிளாக் செய்ய வேண்டும்.நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் வீட்டு தரையை தண்ணீர் கொண்டு துடைத்தால் வெப்பம் குறையும்.
6)வீட்டு மாடியில் தரையில் தண்ணீர் தேக்கினால் வீட்டிற்குள் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கலாம்.அதேபோல் வீட்டு வாசற்படியில் ஒரு கனமான போர்வையை தண்ணீரில் நினைத்து தொங்கவிட்டால் சூரிய வெப்பம் ஊடுருவல் குறையும்.அதேபோல் வீட்டில் பிரிட்ஜ் தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க விட்டு மண் பானையில் தண்ணீர் ஊற்றி பருகினால் உடலுக்கு இயற்கை குளுமை கிடைக்கும்.