NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

0
2

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி இந்நிறுவனத்தில் Junior Overman மற்றும் Mining Sirdar பணிக்கு மொத்தம் 171 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை:

மத்திய அரசு வேலை

நிறுவனம்:

NLC இந்தியா லிமிடெட்

பணி:

Junior Overman(Trainee) பணிக்கு மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Mining Sirdar(Selection Grade – 2) பணிக்கு மொத்தம் 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பணிகளுக்கு மொத்தம் 171 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வித் தகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.அதன்படி ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

மே 14 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

Previous articleஇதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!
Next article+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!