Operation Sindoor: காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா சிந்தூர் ஆப்ரேஷனை கையில் எடுத்தது. இந்த சிந்தூர் ஆப்ரேஷனில் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் எட்டு இடங்களை தரைமட்டமாக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி போருக்கு முன்பே பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதிலும் தடை செய்துள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவிற்கு எதிராக போர் நடத்தப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இவ்வாறு பாகிஸ்தான் கூறியதையடுத்து இந்தியாவில் நாடு தழுவிய போர் ஒத்திகை பயிற்சியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு தினங்களாக பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப்பை குறி வைத்துள்ளதால் மாநில அரசானது தொடர் மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது ரீதியாக பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பேசுகையில், தற்பொழுது போர்க்கால அடிப்படையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பணிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப்பை தவிர்த்து பாகிஸ்தான் எல்லையிலிருக்கும் அனைத்து இடங்களிலும் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுவரை நம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் அனுப்பும் ஏவுகணைகளை வான் வழியிலேயே அழித்து வருகின்றனர்.