CINEMA: தமிழ் திரையுலகில் சமீப காலமாக தொடர் விவாகரத்து நடைபெற்று வருகிறது. முதலில் தனுஷ் ஐஸ்வர்யா என்றிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி வி சைந்தவி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட அனைவரும் விவாகரத்து பற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயம் ரவியும் உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியானது, விவாகரத்து பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து தர மாட்டேன் என்று கூறி வருகிறார்.
இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக ஜெயம் ரவியின் ஹீலர் தோழி கெனிஷா இருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஜெயம் ரவி இதனை முற்றிலும் தவிர்த்து வந்தார். அவர் எனது தோழி எனது ஹீலிங் காக மிகவும் உதவியவர் எனக் கூறினார். இதனையடுத்து ஜெயம் ரவி கெனிஷா உடைய காரில் சென்று கோவா காவல்துறையிடம் சிக்கியது என அடுத்தடுத்து பல பரபரப்பு செய்திகள் வெளியாகியது. அப்போதும் ஜெயம் ரவி கெனிஷா எனது தோழி என்றே குறிப்பிட்டு வந்தார்.
தற்சமயம் இவர்களின் விவாகரத்து பேச்சாளர்கள் ஓய்ந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் மேட்சிங் ஆடை அணிந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் ப்ரீத்தா கல்யாணத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேற்கொண்டு அங்கிருந்த புகைப்படம் எடுப்பவர்களுக்கும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்துள்ளனர். இந்த காரணத்தினால் தான் ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்று மீண்டும் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது.