பெண்களுக்கு மகிழ்ச்சி!! ரூ.1000 உரிமை தொகைக்கு புதிய வாய்ப்பு – என்ன மாற்றம் வந்துள்ளது!!

0
10
Women are happy!! New opportunity for Rs.1000 entitlement amount – what a change!!
Women are happy!! New opportunity for Rs.1000 entitlement amount – what a change!!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவாக்கத்துடன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்ற பெண்களுக்கும் ரூ.1000 தொகை கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 1.25 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தில் நேரடியாகப் பயனடைந்து வருகின்றன. இதனால் கூடுதலாக 10–15 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதனால், மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 கோடியாக உயரக்கூடும் என அரசு எதிர்பார்க்கிறது.இதற்கு இடையிலான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த முறை ஆவணப் பிழைகளால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது. குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்கள், குடும்ப தலைவியாக இல்லாதவர்களும், தனி ரேஷன் கார்டு உள்ள நிலையில் உதவித் தொகைக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும், ரேஷன் கார்டில்  குடும்ப தலைவி என குறிப்பிடப்பட்டவர் பென்ஷன் பெறாதவராகவும், அரசு ஊழியராக இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

அவர்கள் மற்ற தகுதிகளை பூர்த்தி செய்தால்  ரூ.1000 தொகை அவர்களுக்கே வழங்கப்படும்.இதனுடன் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்து தகுதிகளைச் சரி செய்யும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. அரசின் இத்திட்டம், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மிகுந்த பரப்பளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Previous articleவாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?
Next articleபகல்ஹாம் தாக்குதல் முழுவதும் இந்தியாவின் நாடகம்!! பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ!!