நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பதவி:
அலுவலக உதவியாளர்(Office Assistant)
காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பி.ஏ.,பி.காம். போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 22 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
Office Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,500/- ஊதியமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தபால் வழி
இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.iob.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முகவரி:
இயக்குநர்,RSETI திருச்சி,215 TELC வளாகம் முதல் தளம்,மதுரை சாலை,மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை அருகில் IOB கன்டோன்மென்ட் கிளை – 620001.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22-05-2025