வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக மாற்ற இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெட்பாலை
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை விளக்கம்:-
முதலில் பத்து முதல் பதினைந்து வெட்பாலை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு இரும்பு பாத்திரத்தில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெட்பாலை இலைகளை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த எண்ணையை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வாரம் வரை ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணையை சுத்தமான பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த வெட்பாலை எண்ணையை தலைக்கு தடவ வேண்டும்.இதை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி இயற்கையாக கருப்பாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை
2)பொன்னாங்கண்ணி கீரை
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை விளக்கம்:-
நீங்கள் முதலில் கறிவேப்பிலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பாத்திரத்தில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு கறிவேப்பிலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை ஆறவைக்க வேண்டும்.இந்த எண்ணையை பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.
அதேபோல் அவுரி இலையை தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து பிறகு ஆறவைத்து வடித்து தலையில் தடவி வர வெள்ளை முடி தென்படாது.