இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

Divya

வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக இருக்கும்.சிலரது வீடுகள் முன்புறம் மற்றும் பின்புறம் என்று இரு வாசல்கள் கொண்டிருக்கும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசலுக்கு மேல் இருக்க கூடாது.அதிக வாசல் கொண்ட வீட்டில் சதோஷமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.

நமது வீட்டு வாசற்படி வழியாகத் தான் செல்வதை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி உள்ளே நுழைகின்றார்.அப்படி இருக்கையில் வீட்டு வாசல் அமைய வேண்டிய திசை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

வீட்டு வாசல் கிழக்கு,மேற்கு,வடக்கு ஆகிய மூன்று திசை பார்த்தவாறு அமைக்கலாம்.ஆனால் தெற்கு திசை நோக்கியவாறு மட்டும் அமைக்க கூடாது.கிழக்கு திசை நோக்கியவாறு வாசற்படி இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.அதேபோல் மேற்கு நோக்கியவாறு வாசற்படி இருந்தால் அதிக நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.வடக்கு திசை நோக்கியவாறு வாசற்படி இருந்தால் சிலருக்கு அது நன்மை தராது.

அதேபோல் வீட்டின் தென் கிழக்கு திசை பார்த்தவாறு வாசற்படி அமைய கூடாது.அதேபோல் தென் மேற்கு பகுதியை நோக்கி வாசற்படி இருக்கக் கூடாது.இந்த இரு திசைகளில் வாசற்படி அமைந்தால் வாழ்வில் எந்த ஒரு நல்லதும் நடக்காது.

நம் வீட்டை வாஸ்துப்படி கட்டுவது எள்ளளவு முக்கியமோ அதேபோல் வீட்டு வாசற்படியும் வாஸ்துப்படி இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டு வாசற்படி சரியான திசையில் இருந்தால் மட்டுமே செல்வ செழிப்புடன் வாழ முடியும்.வீட்டில் பணம் சேர,கடன் பிரச்சனை வராமல் இருக்க உரிய திசையில் வாசற்படி அமைக்க வேண்டும்.

வீட்டிற்கு அதிகபட்சம் 3 வாசற்படி இருக்கலாம்.அதேபோல் வீட்டு வாசற்படி சரியான திசையில் இருக்க அமைய வேண்டியது முக்கியம்.வீட்டு நுழைவாயில் வாஸ்துப்படி இல்லாவிட்டால் நிச்சயம் ஏதேனும் ஒரு தடை,பணப் பிரச்சனை போன்றவை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.நீங்கள் வாடகை வீட்டிற்கு செல்பவராக இருந்தாலும் இந்த வாசற்படி வாஸ்துவை கட்டாயம் பார்க்க வேண்டும்.