நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.வீட்டில் ஏதேனும் விசேஷம் நடந்தால் கோயிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம்.
சிதறு தேங்காய் கை நழுவி போவது நல்ல பலனை தரும்.உடைக்கும் பொழுது சிதறு தேங்காய் உங்கள் கை நழுவி போவது நல்ல பலனுக்கான அறிகுறியாகும்.இது கடவுளின் அருள் கிடைக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
தேங்காய் உடைக்கும் பொழுது தெரியாமல் கை நழுவினால் அது தடைகள் நீங்குவதறகான அறிகுறியாகும்.நீண்ட நாட்களாக நீடித்துவந்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம்.சிதறு தேங்காயை பெரும்பாலும் விநாயகப் பெருமானுக்கே உடைக்கப்படுகிறது.அப்படி இருக்கையில் சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கை நழுவி போனால் விநாயகர் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அவை கழுவின் போனால் அது நல்ல காரியத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அறியாமல் நழுவினால் மட்டுமே இந்த பலன்கள் கிடைக்கும்.