வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Photo of author

By Divya

வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Divya

ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் தலை பராமரிப்பு பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே நரைமுடி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.தலை முடியை கருமையாக மாற்ற வெங்காயத் தோலை பயன்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெங்காயத் தோல் – கால் கைப்பிடி
2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி

ஹேர் பேக் தயாரிக்கும் முறை:-

அடுப்பில் வாணலி வைத்து 100 மில்லி அளவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் கைப்பிடி அளவிற்கு வெங்காயத் தோல் எடுத்து தேங்காய் எண்ணையில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் எண்ணையில் வெங்காயத் தோல் நன்றாக மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இந்த எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவ வேண்டும்.பிறகு சிறிது நேரம் தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்யுங்கள்.இப்படி செய்து வந்தால் நரைமுடியின் நிறம் நாளடைவில் கருமையாக மாறிவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெங்காயத் தோல் – சிறிதளவு
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி

செய்முறை:-

முதலில் தேங்காய் எண்ணையை வாணலியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெங்காயத் தோலை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணெய் கருமை நிறத்திற்கு வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

அதன் பிறகு எண்ணெய் சூடு தணிந்ததும் ஒரு பாட்டிலுக்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.இதை தலைக்கு தடவி வர வெள்ளை முடி நாளடைவில் கருப்பாகிவிடும்.