கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

Photo of author

By Divya

கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

Divya

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சரும நிறம் இருப்பது கிடையாது.அதேபோல் நமது உடலில் அனைத்து பகுதியும் ஒரே நிறத்தில் இருப்பது கிடையாது.முகம் ஒரு நிறத்திலும் மாற்ற பகுதிகள் வெவ்வேறு நிறத்திலும் இருக்கிறது.

குறிப்பாக அக்குள்,தொடை இடுக்குகள் நிறம் சற்று கருமையான இருக்கும்.இந்த கருமையை போக்கும் அருமையான ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எலுமிச்சை சாறையும் தேங்காய் எண்ணையையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி கலந்து கொள்ளவும்.

இதை அக்குள் பகுதியில் தடவலாம்.அதேபோல் தொடை இடுக்கு,மூட்டு பகுதி என்று உடலில் எங்கெல்லாம் கருமை இருக்கின்றதோ அவ்விடத்தில் தடவி நுரை பீர்க்கன் நார் கொண்டு ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கும்.

தோல் கருமையை நீக்கும் மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – இரண்டு தேக்கரண்டி
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.இதை தோல் கருமை மீது தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

அதேபோல் தக்காளி சாறு,சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸ் செய்து அக்குள்,தொடை உள்ளிட்ட பகுதியில் தடவினால் கருமை சீக்கிரம் குணமாகும்.