நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

Photo of author

By Divya

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

Divya

உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு பகுதியை கிள்ள வேண்டும்.அடுத்து இந்த வெற்றிலையின் நடுப் பகுதியில் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும்.

இந்த வெற்றிலையை ஒன்றன் மீது ஒன்றாக வைக்க வேண்டும்.அதன் மீது பூ வைக்க வேண்டும்.அடுத்து ஒரு மண் விளக்கு எடுத்து வெற்றிலை மீது வைக்க வேண்டும்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலை காம்பை அதில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.இந்த தீபத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து முருகப் பெருமானை மனதார வழிபட வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமை நாளில் செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்த முருகப் பெருமான் வழிபாடு தடைபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.