ஆண்களுக்கு மீசை,தாடி அழகு மற்றும் வீரத்தை காட்டுகிறது.அதுவே ஒரு பெண்ணிற்கு மீசை,தாடி வளர்ந்தால் அவை அழகையே பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற அற்புத குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தீர்வு 01:
வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி மற்றும் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை மீசை,தாடி முடிகள் மீது தடவி நன்றாக காயவிட வேண்டும்.பின்னர் தண்ணீர் கொண்டு தேய்த்தால் மீசை முடி,தாடி முடி உதிர்ந்துவிடும்.
தீர்வு 02:
படிகாரத் தூள் – ஒரு தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – ஒன்றரை தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு படிகாரத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை சை,தாடி முடிகள் மீது தடவி நன்றாக காயவிட வேண்டும்.பின்னர் தண்ணீர் கொண்டு தேய்த்தால் மீசை முடி,தாடி முடி உதிர்ந்துவிடும்.
தீர்வு 03:
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து தாடி,மீசை முடிகள் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு சுத்தம் செய்தால் தேவையற்ற முடிகள் வேரோடு உதிர்ந்துவிடும்.
தீர்வு 04:
கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி
இந்த மூன்றையும் கிண்ணத்தில் சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பேஸ்டை பெண்கள் முகத்தில் உள்ள தாடி,மீசை மீது தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மீசை,தாடி முடி உதிர்ந்துவிடும்.