குளிக்கும் நீரில் இதை கலந்தால்.. சருமம் தகதகன்னு தங்கம் போல் மின்னும்!!

Photo of author

By Divya

குளிக்கும் நீரில் இதை கலந்தால்.. சருமம் தகதகன்னு தங்கம் போல் மின்னும்!!

Divya

உடல் சூடு குறைய சரும நோய்கள் அண்டாமல் இருக்க குளிக்கும் நீரில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.இது பற்றி கீழே விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள்
2)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு அலசி எடுக்க வேண்டும்.இதை குளிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை அதில் போட்டு ஊறவிட வேண்டும்.

இந்த நீரை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊறவைத்த பிறகு குளிக்க வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் எந்தஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

ஐந்து கொத்து வேப்பிலையை உருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை குளிக்கும் தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை குளிக்கும் நீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு இந்நீரை பயன்படுத்தி குளிக்கலாம்.இப்படி குளித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெட்டி வேர்
2)சந்தனம்
3)கற்றாழை

செய்முறை விளக்கம்:-

முதலில் குளுமையான நீரை பாக்கெட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் கைப்பிடி வெட்டி வேர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பீஸ் சந்தனத்தை தூளாக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கற்றாழை துண்டுகளை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

இந்த நீரை பயன்படுத்தி குளித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.