தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பதவிகளுக்கு 330 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த பணிகளுக்கு மே 13 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 11 என்று சொல்லப்பட்டுள்ளது.
நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கணினி வழித் தேர்வு நடத்தப்படும்ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வானது ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது.ஜூலை 23 அன்று இந்த கணினி வழித் தேர்வு நிறைவடைகிறது.
இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய தகுந்த கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.ST/SC பிரிவினர் தேர்வு கட்டணம் செல்லுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் தமிழ் ரிப்போட்டர் பணிக்கு தமிழ் டைப்பிங் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.அதேபோல் ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் தமிழில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.