கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Divya

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Divya

நமது கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதார ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆய்வகநுட்புநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த ஆய்வக நுட்புநர் பணிக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: பொது சுகாதார ஆய்வகம்

இடம்: கோயம்பத்தூர்

பதவி: ஆய்வக நுட்புநர்

காலிப்பணியிடங்கள்:

ஆய்வக நுட்புநர் பணிக்கு மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள்: ஆய்வக நுட்புநர் பணிக்கென்று மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் Diploma in Medical laboratory Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வயது வரம்பு 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தபால் முகவரி:

மாநகரநல அலுவலர்,பொது சுகாதாரப்பிரிவு,மாநகராட்சி பிரதான அலுவலகம்(டவுன்ஹால்),கோயம்புத்தூர் மாநகராட்சி,1109,பெரிய கடைவீதி,கோயம்புத்தூர் – 641001.இந்த முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.