இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை பணத்தாள் அல்லாமல் ஆன்லைன் ட்ரான்ஸாக்சனாக உள்ளது.பெட்டி கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடங்களில் UPI செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
போன் பே,கூகுள் பே,பேடிஎம் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளை இந்திய மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தற்பொழுது UPI செயலிகளில் சில நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத அளவிற்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது.
இதனால் UPI செயலி நம்பி வெளியில் செல்பவர்களுக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது.இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க நீங்கள் சில விஷ்யங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.
1)மொபைலில் ஒரு UPI செயலி மட்டும் வைத்திருக்காமல் இரண்டு அல்லது மூன்று வைத்திருந்தால் ஒன்று செய்லபடவில்லை என்றாலும் மற்றொன்றை வைத்து பரிவர்த்தனை செய்யலாம்.
2)அதேபோல் UPI செயலி போன்று நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பரிவர்த்தனை செய்யலாம்.
3)UPI செயலி வேலை செய்யாத போது க்ரெடிட் கார்டு,டெப்டிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம் .
4)அதேபோல் UPI செயலி செயல்படாத போது நெட் பேக்கிங் பயன்படுத்தலாம்.இந்த வசதியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து உரிய நேரத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யலாம்.
5)அதேபோல் இந்த ஆன்லைன் பரிவர்த்தனையை மட்டும் நம்பி இருக்காமல் எப்பொழுதும் கையில் சிறிய தொகை வைத்திருந்தால் அவரச காலத்தில் கைகொடுக்கும்.