வீட்டுக்கு AC வாங்கப்போறீங்களா? நீண்ட நாள் உழைக்க இதையெல்லாம் பார்த்துட்டு வாங்குங்க!!

Photo of author

By Divya

வீட்டுக்கு AC வாங்கப்போறீங்களா? நீண்ட நாள் உழைக்க இதையெல்லாம் பார்த்துட்டு வாங்குங்க!!

Divya

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி காற்று உதவுகிறது.இன்றைய சூழலில் ஏசி இல்லாத வீட்டில் வாழ்வது கடினமான விஷயமாக உள்ளது.

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏசி உள்ளது.ஏசி வாங்குவது முக்கியம் அன்று.அதை முறையாக பழுதுபார்த்து பராமரித்தால் மட்டுமே அவை நீண்ட காலம் உழைக்கும்.ஆனால் இன்று அவரச காலத்திற்கு வெயிலில் இருந்து மீள உடனடியாக ஒரு ஏசி வாங்கி வீட்டில் மாட்டி விடுகின்றனர்.ஆனால் ஏசி வாங்கும் முன் நாம் சில விஷயங்களை அவசியம் பார்க்க வேண்டும்.

ஏசியில் ஸ்மார்ட் இணைப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.அதேபோல் ரிமோட் கண்ட்ரோல் போன்றவை உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.இதுபோன்ற அம்சங்கள் இருக்கிறதா என்பதை அவசியம் கவனிக்க வேண்டும்.

ஏசி வாங்கும் முன் அந்த பிராண்ட் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.அதேபோல் ஏசி வாங்கும் முன் அதை பழுது பார்க்கும் சேவைகள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

ஏசியில் வேகமான குளிர்ச்சி அம்சங்கள் இருக்கின்றதா என்பது குறித்து கவனியுங்கள்.அதேபோல் வீட்டில் எவ்விடத்தில் ஏசி மாற்ற வேண்டும் என்பது குறித்த சரியான தேர்வு இருக்க வேண்டும்.அதேபோல் உங்கள் வீட்டு அறையின் பரப்பளவிற்கு ஏற்ற ஏசி வாங்க வேண்டும்.

அதேபோல் உங்கள் வீட்டின் மாடி,தரைத்தளம் எவ்விடத்தில் ஏசி மாட்ட போகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஏசி வாங்கலாம்.அதேபோல் நீங்கள் வாங்கும் ஏசி உங்கள் பட்ஜெட்டிற்குள் இருக்கின்றதா என்பதை அறிய வேண்டும்.வாங்கும் ஏசி 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்டிருக்க வேண்டும்.இந்த ஏசி வாங்கினால் மினசார பயன்பாடு முழுமையாக குறையும்.