இந்த உலகில் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை.தினமும் ஏதேனும் ஒரு சண்டை வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.குடும்பம் என்றால் 1000 பிரச்சனைகள்,கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.இருப்பினும் தொடர்ந்து சண்டை மட்டுமே வரும் வீட்டில் ஒற்றுமை என்பதை பார்க்க முடியாமல் போய்விடும்.
குறிப்பாக கணவன்,மனைவி சண்டை அதிகமானால் குடும்பமே பிரிந்துவிடும்.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை முரண்பாடு இருந்தால் வீட்டில் நிம்மதி,சந்தோஷம் இலலாமல் போய்விடும்.அதேபோல் மாமியார்,மருமகள் சண்டை இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.
இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும் சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் மீள தீபம் போட வேண்டும்.இதை எந்த நாளில் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை நாளில் போட வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற முருகன் கோயிலுக்கு சென்று தீபம் போட்டு வழிபட வேண்டும்.மண் விளக்கு ஒன்றில் நல்லெண்ணய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
இந்த எளிய வழிபாட்டை முழுமனதோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளிலும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் எந்த ஒரு சண்டை சச்சரவும் இன்றி நிம்மதியாக வாழலாம்.வெள்ளிக்கிழமை முடியாதவர்கள் புதன் அல்லது வியாழக் கிழமை நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.