உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

Divya

எந்த ஒரு வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அந்த வீட்டில்தான் செல்வ செழிப்பு ஏற்படும்.லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை வராமல் இருக்கும்.

மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.இன்றைய சூழலில் பணம் மட்டுமே எல்லாத்தையும் கொடுக்கிறது.பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

நமக்கு தடையின்றி பணம் வந்து கொண்டே இருக்க மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று இங்கு சொல்லப்பட்டுள்ளது.லட்சுமி தேவிக்கு உகந்த பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படும்.

மகாலட்சுமிக்கு உகந்த பொருட்கள்:

மல்லிகை பூ,வெற்றிலை,நெல்லிக்காய்,கல் உப்பு போன்றவை மகா லட்சுமி குடியிருக்கும் பொருட்களாகும்.அதேபோல் ஏலக்காய்,பச்சை கற்பூரம்,சோம்பு போன்ற பொருட்கள் மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாகும்.

இதுபோன்ற வாசனை நிறைந்த பொருட்களை மகாலட்சுமி தயார் படம் உள்ள இடத்தில் வைத்து வழிபட்டு வந்தால் தன யோகம் உண்டாகும்.அதேபோல் வீட்டில் பணம்,நகை வைக்கும் பீரோ,பணப் பெட்டி போன்றவற்றில் இந்த பொருட்களை வைத்தால் தன யோகம் உண்டாகும்.பணப் பிரச்சனை,வீண் விரயம் போன்றவை ஏற்படாமல் இருக்க லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமை நாளில் வணங்கி வரலாம்.

பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டில் வெற்றிலை வைத்து அதன் மீது மல்லிகைப்பூ,பாக்கு,வாழைப்பழம் போன்றவற்றை வைத்து லட்சுமி தேவியை வணங்கி வந்தால் பணப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.