கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

Photo of author

By Divya

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

Divya

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி

பணியிடம்: கோயம்புத்துர்

பணி:

1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்
2)வாட்ச்மேன்

கல்வித் தகுதி:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் பி.ஏ,பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ச்மேன் பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 08 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகப்பட்ச வயது 35 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://ncscoimbatore.nesnavy.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 05 ஆகும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

[email protected]