இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Divya

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Divya

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்)

பதவி:

1)மேளக்குழு – 01
2)பரிசாரகர் – 01
3)அலுவலக உதவியாளர் – 01
4)காவலர்(பகல் மற்றும் இரவு) – 06
5)திருவலகு – 03

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

1)மேளக்குழு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.48,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

2)பரிசாரகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

3)அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.39,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

4)காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,000/- முதல் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

5)திருவலகு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

மேளக்குழு,பரிசாரகர்,அலுவலக உதவியாளர்,காவலர்,திருவலகு ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://hrce.tn.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 09 ஆகும்.