আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

கழுத்து சுற்றி கருப்பா இருக்கா? இதை காணாமல் போகச் செய்யும் சூப்பர் அழகு குறிப்பு!!

Published on: மே 15, 2025
---Advertisement---

உங்கள் கழுத்திற்கு கீழ் கருமையாக இருந்தால் உங்கள் முக அழகு குறைந்துவிடும்.எனவே கழுத்தை சுற்றியிருக்கும் கருமையை நீக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு தோல்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

தரமான ஆரஞ்சுத் தோலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஆரஞ்சுத் தோலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு சமையல் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கழுத்து கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த கற்றாழை ஜெல்லில் அரை தேக்கரண்டி அளவிற்கு சமையல் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கழுத்தை சுற்றியிருக்கும் கருப்பு தானாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு சாறு
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த உருளைக்கிழங்கு சாறில் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து கழுத்துப் பகுதியை சுற்றி அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now