இனி நாமும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான தந்தூரி சிக்கன் செய்யலாம்!!

Photo of author

By Divya

இனி நாமும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான தந்தூரி சிக்கன் செய்யலாம்!!

Divya

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் பிடித்த அசைவமாக கோழி இறைச்சி உள்ளது.இந்த கோழிக்கறி வைத்து ஹோட்டல் ஸ்டைலில் தந்தூரி சிக்கன் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*கோழிக்கறி – 1 Kg
*தயிர் – கால் கப்
*இஞ்சி பூண்டு விழுது – இரண்டு டேபுள் ஸ்பூன்
*கொத்தமல்லி தூள் – ஒரு டேபுள் ஸ்பூன்
*மிளகாய் தூள் – ஒரு டேபுள் ஸ்பூன்
*கரமசாலா தூள் – அரை டேபுள் ஸ்பூன்
*கஸ்தூரி மேத்தி – அரை டேபுள் ஸ்பூன்
*கேசரி பவுடர் – அரை டேபுள் ஸ்பூன்
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – தேவையான அளவு
*எலுமிச்சை சாறு – இரண்டு டேபுள் ஸ்பூன்
*நெய் – ஒரு டேபுள் ஸ்பூன்
*சீரகத் தூள் – அரை டேபுள் ஸ்பூன்

தந்தூரி சிக்கன் செய்முறை:-

முதலில் நீங்கள் ஒரு கிலோ கோழி இறைச்சி துண்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும்.தந்தூரி சிக்கன் செய்ய பெரிய சைஸ் கோழி இறைச்சி துண்டுகள் வாங்க வேண்டும்.

பின்னர் இதற்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும்.அதற்கு ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கஸ்தூரி மேத்தி,சீரகத் தூள் கரமசாலா தூள் உள்ளிட்டவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து தயிர்,எலுமிச்சை சாறு,உப்பு ஆகியவற்றை போட்டு கலந்துவிட வேண்டும்.உங்களால் கைகளால் கலந்துவிட முடியவில்லை என்றால் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பேஸ்டாக அரைத்துக் கொள்ளலாம்.

பிறகு இதில் அரை டேபுள் ஸ்பூன் கேசரி பவுடர் போட்டு கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஐந்து பல் வெள்ளை பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை பேஸ்டாக அரைத்து இதில் மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த விழுதில் சிக்கன் துண்டுகளை போட்டு குறைந்தது 6 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

சிக்கன் துண்டுகள் மசாலாவில் நன்கு ஊறி வந்த பின்னர் அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு மசாலாவில் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

இந்த தந்தூரி சிக்கனுக்கு புதினா சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.தந்தூரி சிக்கன் மீது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு வெங்காயத் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.