இன்றைய காலகட்டத்தில் பணம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது.நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் செய்ய பணம் அவசியமாகிறது.இந்த பணம் இருந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மை மதிக்கும்.அப்படி நமக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கும் பணத்தை வீண் விரயமாகாமல் சேர்ப்பது என்பது மிகவும் கடிமனமான விஷயமாக உள்ளது.
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒரு வழியில் செலவாகி பணப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது பலரது குமுறல்.சிலருக்கு அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.இந்த பணப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இங்கு சொல்லப்பட்டுள்ளது.
பணம் மகாலட்சுமியின் மரு உருவமாகும்.இந்த பணத்திற்கு உரிய மரியாதை கொடுத்தால் மட்டுமே அவை நம் கையைவிட்டு போகாமல் இருக்கும்.பண வரவு அதிகரிக்க,பணம் வீண் விரயமாகாமல் இருக்க கீழே சம்பளம் வாங்கியதும் நாம் அதை பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன் வைக்க வேண்டும்.
அடுத்து அதன் மீது வாசனை நிறைந்த பூக்களை வைக்க வேண்டும்.வாசனை மலர்களில் லட்சுமி தேவி குடியிருக்கின்றார்.இப்படி செய்தால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீண் விரையமாகாமல் இருக்கும்.
அதேபோல் பணத்தை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து பச்சை கற்பூரம்,பட்டை,கிராம்பு,சோம்பு போன்ற வாசனை பொருட்களை வைத்தால் பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கும்.
அதேபோல் துளசி,வெற்றிலை போன்ற இலைகளை பணத்துடன் வைத்தால் வீண் விரையம் ஆகாமல் பணம் குவிந்து கொண்டே இருக்கும்.வாசனை நிறைந்த பொருட்களுடன் இந்த பணத்தை வைத்தால் அதன் வரவு அதிகரிக்கும்.