இம்சை கொடுக்கும் எலிகளை ஓட விரட்ட.. வெங்காயத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

இம்சை கொடுக்கும் எலிகளை ஓட விரட்ட.. வெங்காயத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya

வீட்டில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் எலிகளை ஓட விரட்ட வைக்கும் அற்புத டிப்ஸ் இதோ.

தேவையான பொருட்கள:-

1)வெங்காயத் தோல் – ஒரு கைப்பிடி
2)பூண்டு தோல் – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:-

வெங்காயத் தோல் மற்றும் பூண்டு தோலை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.இதை எலி நடமாடும் இடத்தில் தூவினால் எலி நடமாட்டம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2)மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு இந்த பூண்டு நீரை ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பூண்டு நீரை எலிகள் நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.

அதேபோல் புதினா இலைகளை அரைத்து தண்ணீரில் மிக்ஸ் செய்து எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – 10
2)பட்டை – இரண்டு

செய்முறை விளக்கம்:-

உரலில் கிராம்பு மற்றும் பட்டை ஆகிய இரண்டையும் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஸ்ப்ரே பாட்டிலில் கொட்டி தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எலிகள் நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.